Translate

Wednesday, February 26, 2020

மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை பேடன் பவுளின் 163 வது ஜனன தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது !

 

சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுளின் 163 வது ஜனன தினம் மட்டக்களப்பு நகரில் பெருமளவு சாரணிய மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக இன்று (22) கொண்டாடப்பட்டது. 

மாவட்ட சாரணியர் ஆணையாளர் வி. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஜனன நிகழ்வினை மாவட்ட சாரணிய சங்கத்தின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நீரூற்று பூங்காவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வின் போது மாவட்ட ஆணையாளர் பிரதீபன் இங்கு நிறுவப்பட்டுள்ள சாரணியத்தின் தந்தை பேடன் பவுளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

இதன் பின்னர் வின்ன்சன்ட் உயர்தர தேசிய பாடசாலையில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் ஆரசாங்க அதிபர் சாரணிய ஸ்தாபகரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆணையாளரும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான சரவணமுத்து நவநீதன் பிறந்த நாள் கேக்கினை சம்பிரதாய பூர்வமாக வெட்டி அங்கத் தலைவர்களுக்கு ஊட்டினார்.

இந் நிகழ்வில் அரச அதிபர் கருத்து வெளியிடுகையில் இம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சாரணிய அமைப்பில் பெருமளவினர் இணைந்திருப்பது எமக்கு மகிழ்வினைத் தருகிறது. சாரணிய உடையில் சாரணியர்களை பார்ப்போமானால் சாரணியர்களின் மனக் கம்பீரம் தோன்றும். இதில் இணைந்து மாணவர்கள் கல்விக்கு அப்பால் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பயிற்சிகளை இந்த சாரணிய இயக்கம் பெற்றுத் தரும்.
எதிர் காலத்தில் இந்த சங்கத்தின் பயிற்சிகளைப் பெறுவதற்கு சிறந்த கட்டட வசதிகள் இல்லை என்ற குறைபாட்டை எனது சேவை காலத்தில் பெற்றுத்தருவதுடன் என்னால் இயன்றளவு உதவிகளை இம் மாவட்ட சாரணிகளுக்கு பெற்றுத்தர தயாராக இருக்கின்றேன் எனக்கூறினார்.


No comments:

Post a Comment